ஒரு முற்றிலுமானவர் A ABSOLUTE 63-0304 திங்கட்கிழமை மாலை, மார்ச் 4, 1963 சிட்டி அரங்கம், ஹவுஸ்டன், டெக்சாஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் ùNn§: 63-0304 - ஒரு முற்றிலுமானவர் நன்றி, சகோதரரே. நன்றி, சகோதரர் ஹோக்ஸ்ட்ரா. ஹியூஸ்டன் நகருக்கு என் இனிய மாலை வணக்கம். இன்று இரவு மறுபடியும் இந்த ஹியூஸ்டன் நகரில் இருப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். நான் இங்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்று இரவு இங்கே பேசிய ஒவ்வொருவரின் பேச்சையும் நான் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். 2 அன்றொரு நாள் மற்றொரு இடத்தில் வேறொரு காரியத்திற்காக நான் ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், இந்தக் குழந்தைகள் மரணத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் என் பதை நான் அறிந்தபோது, நான் நினைத்தேன், "அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது நேரிட்டால், எனது கருத்தைத் தெரிவிப்பதற்கும், அந்தத் தாய் தகப்பனுக்கும் இந்தக் குழந்தைகளுக்கும் உதவி செய்வதற்கும், அவர்களின் உயிரைக் காப்பாற் றுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கும் நான் இங்கு வராமல் போனால், என்னை நானே ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்." 3 ஹியூஸ்டன் எனக்கு ஒரு நினைவு கூறும் இடமாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலில் இங்கு ஹெரால்ட் ஆஃப் ஃபெய்த் (Herald Of Faith), சகோதரர் கிட்சன் ஆகியோரிடம் வந்தபோதும், பின்னர் சகோதரர் ரேமண்ட் ரிச்சி மற்றும் நகரத்தின் போதகர்களுடன் இந்த அரங்கத்திற்கு வந்தபோதும் நான் போற்றி பாதுகாத்து வருகிற பல சிறந்த நினைவுகளை இந்த இடம் கொண்டுள்ளது. 4 பின்னர், நிச்சயமாக, திரு. ஐயர்ஸ், திரு. கிப்பர்மன் ஆகியோர் இருந்த அந்த இரவில், நான் தவறான எதையும் சொல்லவில்லை என்பதை கேமரா நிரூபித்தது. அது சத்தியமாக இருந்தது. கேமராவின் இயந்திரக் கண் அந்தத் தரிசனத்தைப் பிடித்தபோது... அல்லது, தரிசனத்தை அல்ல; அது ஒரு நிஜம். நாம் பிரசங்கிக்கிற, மிகவும் நேசிக்கிற கிறிஸ்து, நம்முடன் இருப்பதாக வாக்களித்தபடியே நம்முடன் இருந்தார், மேலும் கேமரா அவருடைய படத்தைப் பிடித்தது. நான் அந்த ஒளியை எல்லா நேரத்திலும் பார்ப்பதாக கடந்த காலங்களில் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் மக்கள் அதைப்பற்றி சற்று சந்தேகப்படுவார்கள், அவர்கள் அப்படி இருப்பதைக் குறித்து நீங்கள் நம்பக்கூடும், ஆனால் அன்று இரவு அது நிரூபிக்கப்பட்டது. அதுதான் முதன்முறையாகப் படம் பிடிக்கப்பட்ட தருணம். 5 அதன் பிறகு, அது பலமுறை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமீபத்தில், அந்த அபிஷேகம் இறங்கி வந்தபோதும், அது மீண்டும் மேலே சென்றபோதும் எடுக்கப் பட்டது. அந்த விஷயங்கள் ஏதோ ஒரு மனிதனை மேன்மைப்படுத்துவதற்காக அல்ல, மாறாகத் தன் மக்களின் மத்தியில் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை மெய்ப்பித்துக் காட்டுவதற்கே ஆகும். 6 இந்த வழக்கிலும் நமக்கு உதவுவதற்கு அதே கர்த்தராகிய இயேசு இன்று இரவும் இங்கே இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். நம்மை விட அவரே இதில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்று நான் நம்புகிறேன். இந்தக் குழந்தைகளின் பெற்றோ ருக்காக நான் நிச்சயமாக அனுதாபப்படுகிறேன், மேலும் அவர்களை மரணத்தின் வாயிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நான் தோளோடு தோள் நிற்கிறேன். 7 இது ஒரு எழுப்புதல் கூட்டம் அல்ல, மாறாக மரணத்தின் நிழலில் படுத்திருக்கும் இந்த ஆத்துமாக்களுக்காக நடத்தப்படும் தொடர் ஜெபக் கூட்டங்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தாமதமாக வந்திருக்கிறேன். நான் வெகு நேரம் பேசப்போவதில்லை. 8 ஆனால் நான் இரண்டு வேதப் பகுதிகளில் வாசிக்க விரும்பும் ஒரு வேத வாக்கியத்திலிருந்து ஒரு உரையை, அல்லது ஒரு சந்தர்ப்பப் பொருளை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். வேதாகமம் வைத்திருப்பவர்கள், என்னுடன் ஒரு கணம் பிலிப்பியர் நிருபம், 1-ம் அதிகாரம், மற்றும் 20-ம் வசனத்திற்குத் திருப்புங்கள். நான் எதிலேயும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய்... 9 மேலும் அப்போஸ்தலர் நடபடிகள் புஸ்தகம், 2-ம் அதிகாரம் மற்றும் 30-ம் வசனத்திலும் வாசிக்கலாம். நான் 25 முதல் 30 வரை வாசிக்கலாம். தாவீது அவரைக்குறித்து: கர்த்தரை எனக்கு முன்பாக எப்பொழுதும் நிறுத்தி வைத்திருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடிக்கு அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறார்; அதினால் என் இருதயம் மகிழ்ச்சியாயிருந்தது, என் நாவு களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர். ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோ ஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுக்குத் தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரண மடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காச னத்தின்மேல் உன் சந்ததியிலே கிறிஸ்துவை மாம்சத்தின்படி எழும்பப்பண்ணி வைப்பேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்த படியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லை என்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லை என்றும் முன்னறிந்து, அவருடைய உயிர்த்தெழு தலைக்குறித்துப் பேசினான். 10 ஜெபத்திற்காக நாம் ஒரு கணம் தலைகளைத் தாழ்த்துவோம். 11 எங்கள் பரலோக பிதாவே, உமது இரக்கத்திற்காக நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். ஆண்டவரே, நாங்கள் இன்று இரவு இங்கே கூடியிருப்பதன் உண்மையான காரணம் இரக்கத்தைக் கேட்பதற்கே ஆகும். அது எங்களுக்கு அருளப்படும் என்று விசுவாசிக்கிற விசுவாசம் எங்களுக்கு இல்லாவிட்டால் நாங்கள் இதைக்கேட்டிருக்க மாட்டோம். நாங்கள் இன்று இரவு ஊக்கத்தோடு பரிந்துபேசிக் கொண்டிருக்கிற இவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று தேசமெங்கும் மனிதர்கள் விமானங்களில் பறந்து வந்திருக்கிறார்கள், எல்லா இடங்களிலிருந்தும் உம்மை நோக்கி ஜெபங்கள் ஏறெடுக்கப் படுகின்றன. ஆண்டவரே, இந்த இளைஞர்களின் தாய்மார்களுக்கும் தந்தையர்களுக்கும் பலன் தரும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 12 மேலும், இந்த இளைஞன் தன் வாழ்க்கையை உம்மை நோக்கித் திருப்பி, உமக்குச் சேவை செய்ய விரும்புவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவன் சுவிசேஷ ஊழி யராக மாற விரும்புவதாகப் பேச்சாளர்களில் ஒருவர் சொல்வதை நாங்கள் கேட்டோம், தேவனே, அந்த வாலிபனுக்கு இந்த வாய்ப்பை நீர் அருளவேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 13 எங்கள் பாவங்களை மன்னியும், தீய எண்ணங்களிலிருந்தும், இந்த மக்களுக்காக எங்கள் ஜெபம் பதிலளிக்கப்படுவதைத் தடை செய்யும் வகையில் எங்கள் வழியில் குறுக்கிடும் எதுவாயினும் அதிலிருந்து எங்கள் இருத யங்களைச் சுத்திகரிப்பீராக. 14 நாங்கள் உமது வார்த்தையை வாசித்திருக்கிறோம், வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் உமது வார்த்தை ஒழிந்துபோகாது என்பதை நாங்கள் அறிவோம். வழக்கறிஞரும் பலரும் பேசுவதை நாங்கள் கேட்டபடியால், இப்போது இந்த வழக்கில் உமது தெய்வீக சித்தம் என்னவாக இருக்குமோ, அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு பரிசுத்த ஆவியானவர் மூலமாக எங்களுக்கு நீர் அருள்வீராக. அடுத்து என்ன செய்ய வேண்டும், எங்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை நாங்கள் கண்டுகொள்ளும்படி ஜெபிக்கிறோம். ஆண்ட வரே, அதைச் செய்ய நாங்கள் இங்கே இருக்கிறோம். உமது வார்த்தையின் மூலமாக அதை எங்களுக்குத் தெரியப்படுத்தும் ஆண்டவரே. உமது குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 15 இந்தச் சில வசனங்களை வாசித்தேன், இந்தத் தருணம் மிக முக்கியமானது என்பதை நான் உணர்கிறேன், ஏனென்றால் இது ஒரு கரிசனைக்குரிய விஷயம். அந்தத் தாயின் தந்திச் செய்தியை நான் கேட்டபோதும், பெற்றுக் கொண்ட போதும், "அந்த வரிசையில் அமர்ந்தி ருப்பது என் மகனாகவோ அல்லது என் மகளாகவோ இருந்தால் என்ன செய்வது?" என்று நான் சிந்தித்தேன். மேலும் நான்... நம்மால் முடிந்த அனைத்தையும் இதற்குச் செய்ய நாம் விரும்புகிறோம். 16 "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் வாசித்த வார்த்தை மிகச்சிறிய பகுதிதான்" என்று சிலர் சொல்லலாம். அதுவும் உண்மையாக இருக்க லாம். ஆனால், பாருங்கள், வார்த்தைகளின் அளவோ அல்லது எண்ணிக்கையோ முக்கிய மல்ல. அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதே முக்கியம். அது என்னவென்றால், அது தேவனுடைய வாக்குறுதி. 17 இன்று இரவு இந்த வேத வாக்கியத்திலிருந்து, அல்லது இதிலிருந்து ஒரு உரையை நான் தெரிந்துகொள்ள விரும்பு கிறேன்: ஓர் அப்ஸ்லூட் (ஓர் இறுதி முடிவு அல்லது உறுதியான நிலை). 18 சற்று நேரத்திற்கு முன்பு, என் மோட்டல் அறையில் அமர்ந்திருந்தபோது நான் இந்த உரையைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் இப்போது நமக்குத் தேவைப்படுவது நேர் மறையான ஒன்று, நாம் பிடித்துக்கொள்ளக்கூடிய மற்றும் அது உண்மை என்று அறியக்கூடிய ஒரு 'அப்ஸ்லூட்' (ஓர் உறுதியான நிலை) என்று நான் நினைக்கிறேன். இது போன்ற இக்கட்டான நேரத்தில், நாம் உறுதியாக இருக்கக்கூடிய ஒன்று, சரியானது என்று அறியக்கூடிய ஒன்று, வழக்கு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிய நாம் பற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று நமக்கு அவசியம். 19 இப்போது, வெப்ஸ்டர் அகராதியின்படி, ஓர் 'அப்ஸ்லூட்' என்பது, "வல்லமையில் எல்லையற்றது," மற்றும் முக்கியமாக ஒரு "இறுதியானது (ultimate)." ஒரு 'அல்டிமேட்' என்பது "ஆமென்". அதுதான் அப்ஸ்லூட். அதாவது... அதுதான் முடிவு. அதுதான் எல்லாம். 20 இப்போது, உலகில் இதுவரை நிகழ்ந்த ஒவ்வொரு சிறந்த சாதனையும், ஏதோ ஒரு வகையான 'அப்ஸ்லூட்'-உடன் இணைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியாது. 21 ஒரு வாலிபன் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறான் என்றால், அவன் அந்த இளம் பெண்ணின் குணாதிசயத்தை அறிந்திருக்க வேண்டும். அல்லது அந்த இளம் பெண் அந்த வாலிபனின் குணாதிசயத்தை அறிந்திருக்க வேண்டும், அவள் பற்றிக்கொள்ளக்கூடிய ஏதோ ஒன்று இருக்க வேண்டும். "இவன் ஒரு நேர்மையான மனிதனாக இருப்பானா? இவன் எனக்குச் சரியான கணவனாக இருப்பானா?" "இந்தப் பெண், வாழ்க்கையில் நான் அவளிடமிருந்து எதிர் பார்ப்பதை, விசுவாசம் மற்றும் பிறவற்றை எனக்குத் தருவாளா?" அப்படியானால் அவர்கள் தங்கள் உறுதி மொழிகளை அடிப்படையாகக் கொள்ளக்கூடிய ஒரு இடம் இருக்க வேண்டும், உறுதியாக நிற்கக்கூடிய ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதனால் தான், இந்த 'அப்ஸ்லூட்'டை இணைப்பதற்காக நாம் அவர்களைத் சபைக்கு, தேவனுடைய வார்த்தையினிடத்திற்குக் கொண்டு வருகிறோம். 22 நாம் பார்க்கிறபடி, பவுலுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பற்றிக்கொண்டிருந்த ஒரு 'அப்ஸ்லூட்' இருந்தது, அது அவரது மன மாற்றத்திற்குப் பிறகு: கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை! ஓர் 'அப்ஸ்லூட்'டை கொண்டிருப்பதற்கு எப்பேர்ப்பட்ட இடம்: கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை! அது அவர் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது, ஏனென்றால், "நான் இப்போது வாழ்கிற வாழ்க்கை" என்று அவர் கூறினார், அது அவர் முன்பு வாழ்ந்ததிலிருந்து வித்தியாசமானது. 23 பவுலை இந்த முடிவுக்குக் கொண்டுவந்த அந்த அனுபவம் அவருக்கு ஏற்பட்ட ஒரு காலம் வந்தது. பவுல் யூதர்கள் மத்தியில் ஒரு பெரிய, வல்லமை வாய்ந்த மனிதராகவும், சிறந்த வேதபண்டிதராகவும் இருந்தார், ஆனால் அவர் தனது நிலைப்பாட்டில் அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை. ஆனால் ஒரு நாள், தமஸ்குவுக்குச் செல்லும் வழியில், ஒரு ஒளி, அக்கினி ஸ்தம்பம் வானத்திலிருந்து இறங்கி வந்தது. பவுல் ஒரு யூதராக இருந்தபடியால், இந்த ஒளி, அக்கினி ஸ்தம்பம், எகிப்திலிருந்து தன் மக்களை வழிநடத்திய தேவன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்கள் இந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பின்பற்றியிருந்தார்கள். எனவே, ஒரு யூதராக இருந்ததால், அவர் அவரிடம் விரைவாக, "ஆண்டவரே, நீர் யார்?" என்று கேட்டார். அவர் அவரை "ஆண்டவர்" என்று அறிந்தார், ஆனால், "நீர் யார்?" 24 அக்கினி ஸ்தம்பத்திலிருந்து ஒரு குரல் வந்தது, "நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்." பழைய ஏற்பாட்டின் யேகோவாதான் புதிய ஏற்பாட்டின் இயேசு என்பதை அந்த நேரத்திலிருந்து பவுல் அறிந்துகொண்டார். அவர் பற்றிக்கொள்ளக்கூடிய ஒன்றை அவர் பெற்றிருந்தார், அதனால்தான் அவரால் அந்தச் சிறந்த எபிரேயர் புஸ்தகத்தை எழுத முடிந்தது. 25 உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்தால், சாதாரணமாக நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்வீர்கள், குறிப்பாக நீங்கள் தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையை உடையவராயிருந்தால். தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கை ஒரு நபரை சாதாரணமாகச் செய்யாத காரியங்களைச் செய்ய வைக்கும்; மிகவும் வித்தியாசமான, விசித்திரமான காரியங்களை. கிறிஸ்தவ வாழ்க்கை ஏன் அவ்வளவு வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது? ஏனென்றால் அவர்கள் தேவனு டைய வார்த்தையை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள், அது இன்றைய உலகத் திற்கு ஏறக்குறைய அந்நியமாக இருக்கிறது. 26 இப்போது, நம்மிடம் சபைகள் இருக்கின்றன, ஸ்தாபனங்கள் இருக்கின்றன, உலகெங்கிலும் பல மதங்கள் இருக்கின்றன. 27 நான் உங்களுடன் ஹியூஸ்டனில் இருந்ததிலிருந்து, உலகம் முழுவதும் ஏழு முறை சுற்றி வந்ததில், இந்த உலகின் தெய்வங்கள் மற்றும் மதங்கள் குறித்த பல அறிவை நான் சேகரித்துள்ளேன். ஆனால் நான் அதைப்பற்றிப் பேசவில்லை. 28 கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்ட ஓர் 'அப்ஸ்லூட்'டைப் பற்றி நான் பேசுகிறேன். அப்படியென்றால், அது உங்களை ஒரு வித்தியாசமான நபராக மாற்றுகிறது. நீங்கள் வித்தியாசமான காரியங்களைச் செய்கிறீர்கள். உங்கள் சிந்தனை நீங்கள் முன்பு சிந்தித்ததை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒன்றைக் கண்ட டைந்துள்ளீர்கள், வானங்களையும் பூமியையும் படைத்த ஒருவரிடத்தில் நீங்கள் விசுவாசத்தை நங்கூரமிட்டுள்ளீர்கள், அவருடைய வார்த்தையே சிருஷ்டிக்கும் வல்லமை கொண்டது, அவரே உலகத்தை வார்த்தையினால் உருவாக்கின தேவன், அவருக்கு அரிதானது ஒன்றுமில்லை. எனவே அவருடைய வார்த்தைகளை நீங்கள் எடுத்துக்கொள்வதால், அது உங்களையும் சிருஷ் டிக்கும் திறன் கொண்டவராக மாற்றுகிறது. வார்த்தை என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒரு எண்ணம். 29 இப்போது, பவுல் அந்த நிலைக்கு வந்திருந்தார், அதாவது அவருக்கு முழுவதுமாக ஒரு வேதசாஸ்திர அனுபவம் மட்டுமல்ல, அவருக்கு ஒரு சொந்த சாட்சி இருந்தது. அவர் தேவனைச் சந்தித்திருந்தார், தான் தேவனால் அழைக்கப்பட்டவர் என்பதை அறிந்திருந்தார். அதைப்பற்றி யாரும் அவருக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. தேவன் இன்னும் தேவ னாகவே இருக்கிறார் என்பதில் அவர் முற்றிலும் உறுதியாக இருந்தார். உலகம் அதைச் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! 30 இன்று இரவு இங்கே அமர்ந்திருக்கும் இந்தக் கூட்டம், தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள முடிந்தால்! தெய்வீக சுகம் அல்லது வேறு எந்த விஷயத்திலும் அவர் பதிலளிப்பதைப் போலவே இந்த வழக்கிலும் பதிலளிக்க அவர் வல்லவ ராயிருக்கிறார். அவர் இன்னும் தேவனாகவே இருக்கிறார். நம் நம்பிக்கைகளை மட்டுமல்ல, நமது உறுதியான சிந்தனையையும் அவர் சொல்வதின் மீது நம்மால் கட்டியெழுப்ப முடிந்தால்! அது சத்தியம் என்பதை நாம் அறிவோம். 31 மக்கள் வேடிக்கையாக நடந்து கொள் கிறார்கள். தேவனுடைய வார்த்தையாகிய ஓர் 'அப்ஸ்லூட்'டை அவர்கள் கண்டடைந் திருப்பதால், அவர்கள் எதிர்மறையான பக்கத்தை மறந்துவிடுவது போல் தெரிகிறது. இயேசு சொன்னார், "வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்துபோகாது." எனவே நம்மிடம் வாக்குறுதியின் வார்த்தை இருந்தால், அது தோற்றுப்போகாது. அது தோற்றுப்போக முடியாது. 32 ஹியூஸ்டன் நகரின் மதப்பற்றுள்ள மக்கள் இங்கு ஜெபக் கூட்டங்களில் மனித உயிர்களுக்காக ஆர்வம் கொண்டுள்ளனர் என்று நான் நம்புகிறேன். எகிப்தில் பார்வோனை அவர் மாற்றியது போல, மனிதர்களின் இருதயங்களை மாற்றக்கூடிய, மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியை நோக்கிக் கூப்பிடுவதற்கே நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் தேவன். நாம் இப்போது எதிர்மறையான பக்கத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, நேர்மறையான பக்கத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும். 33 உங்களுக்கு விசுவாசம் வருவதற்கு முன், விசுவாசம் வைப்பதற்கு ஏதோ ஒன்று இருக்க வேண்டும். சர்வவல்லவரின் வல்லமைகளை சிருஷ்டித்த உயிருள்ள தேவனுடைய வார்த்தையை விட வேறு எதில் நீங்கள் அதிக விசுவாசம் வைக்க முடியும்? இதைவிட வேறு எதில் நாம் நம் நம்பிக்கைகளை வைக்க முடியும்? ஆகையால் இது உங்களை வித்தியாசமாகப் பார்க்க வைக்கிறது, வித்தியாசமாகச் செயல்பட வைக்கிறது. தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். நமக்கு இப்போது இருப்பதைப் போன்ற கஷ்டங்கள் எழும்போது, அது ஒரு நங்கூரமாக இருக்கிறது. அது உங்களைப் பிடித்துக்கொள்ளும் ஒன்று, நீங்கள் கட்டப்பட்டிருக்கும் ஒன்று. தேவனுடைய வார்த்தையாகிய அந்த வாக்குறுதியுடன் நாம் கட்டப்பட்டிருக்கிறோம். 34 புயல் நேரத்தில் கப்பலுக்கு நங்கூரம் எப்படி ஓர் 'அப்ஸ்லூட்'டாக (உறுதியான பற்றுக்கோடாக) இருக்கிறதோ அதுபோல. கப்பல் கடலில் பயணம் செய்து கொண்டிருக்கலாம். நங்கூரம் முன்புறத்தில் இருக்கிறது. அது... அது ஓய்வாக இருக்கிறது. ஹியூஸ்டனில் உள்ள நீங்கள் கடலுக்கு மிக அருகில் இருப்பதால், கப்பல்கள் வருவதைப் பார்க்கிறீர்கள். 35 இந்த மிகப் பெரிய நங்கூரத்தின் அதிகப்படியான எடையை ஏன் சுமக்க வேண்டும்? ஆனால், பாருங்கள், புயல்கள் வரும்போது, கடலைக் கிழித்தெறியும் சீற்றமான புயல்கள் கப்பலை எங்காவது கரைக்குத் தள்ளி, அதை நொறுக்கிவிடலாம் அல்லது ஆழமற்ற நீரில் கவிழ்த்துவிடலாம்; அது ஆழமான நீருக்குள் சென்று, இந்த மிகப் பெரிய நங்கூரத்தைக் கீழே இறக்குகிறது, அது கடலின் அடிப்பகுதியில் இழுத்துச் சென்று கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு மலையின் உச்சியில் அது மாட்டிக்கொள்ளும் வரை செல் கிறது. பிறகு அந்தப் புயல்கள் விரும்பினால் சீறிப்பாயட்டும்; அதற்கு ஓர் 'அப்ஸ்லூட்' கிடைத்துவிட்டது. நங்கூரம் எங்கேயோ தொலைவில் பிடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அது இறுக்கமாக இருக்கிறது. கப்பலையும் அலைகளையும் சுற்றிச் சுழற்றினாலும், அதற்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்கிறது, ஏனென்றால் அது கட்டப் பட்டிருக்கிறது. 36 ஒரு மனிதன் கிறிஸ்துவோடும் அவருடைய வார்த்தையோடும் கட்டப்பட்டு, அதை விசுவாசிக்கும்போது அப்படித்தான் இருக்கிறான். அங்கே ஓர் 'அப்ஸ்லூட்' இருக்கிறது, ஏதோ ஒன்று அவனைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. 37 ஓர் 'அப்ஸ்லூட்' என்பது நீங்கள் வழிதவறிப் போகும்போது துருவ நட்சத்தி ரத்தைப் (North star) போன்றது. நீங்கள் உங்கள் திசைகளைத் தொலைத்துவிட்டு, திரும்பவும் உங்கள் வழியைக் கண்டுபிடிக்க விரும்பும்போது, துருவ நட்சத்திரம் ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருக்கிறது. இப்போது, மற்ற நட்சத்திரங்கள் உள்ளன, ஆனால் அவை உலகத்துடன் சுழல்கின்றன. உலகம் அவற்றைச் சுற்றி வரும்போது, அது... அது அவற்றை விட்டு விலகிச் செல்கிறது. (உங்களுக்குத் தெரியுமா?), அதே விடிவெள்ளி நட்சத்திரம்தான் சாயங்கால நட்சத்திரமாகவும் இருக்கிறது, ஏனென்றால் உலகம் தான் சுழன்றுள்ளது. ஆனால் நகராத ஒரு நட்சத்திரம் இருக்கிறது, அது பூமியின் நடுப்பகுதியிலேயே மையமாக அமைந்துள்ளது. ஆகையால் அந்த... அது ஒரு நிலையான நட்சத்திரம். துருவ நட்சத்திரம் உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் எப்போதும் உங்கள் வழியைக் கண்டுகொள்ளலாம். ஆனால், ஐயோ, மனிதன் தொலைந்துபோய், எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் இருக்கும்போதுதான் அது தேவைப்படுகிறது. 38 இப்போது, எனக்கு ஒரு நட்சத்திரத்தைத் தெரியும். ஓ, அது துருவ நட்சத்திரத்தை விட மேலானது. அதனுடன் கட்டப்பட்டு, அவருடைய பிரசன்னத்தைக் காணும்போது, நீங்கள் எப்படித் தொலைந்து போனாலும் அல்லது எங்கே இருந்தாலும், அவருடைய வழிநடத்துதலால் உங்கள் வழியைத் திரும்பக் கண்டடையலாம், அதுவே அவருடைய வார்த்தை. எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும் வெளி யேறும் வழி அதுவே. அதுவே சமாதா னத்திற்கான வழி. அதுவே வெற்றிக்கான வழி. இந்த நட்சத்திரமாகிய கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதே வாழ்விற்கான வழியாகும். இப்போது, நீங்கள் அந்த நட்சத்திரத்துடன் கட்டப்பட்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரே அந்த நட்சத்திரத்தை மட்டுமே சுட்டிக்காட்டும் திசைக்காட்டியாக (Compass) இருக்கிறார். அந்தப் பரிசுத்த... 39 ஒரு திசைக்காட்டி, அந்த வட துருவத்தை நோக்கி காந்த சக்தி ஊட்டப் பட்டிருக்கிறது. நீங்கள் எப்பேர்ப்பட்ட காட்டுக்குள் இருந்தாலும், அல்லது உங்களைச் சுற்றி முட்செடிகள் எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், அல்லது கடலில் எவ்வளவு பனிமூட்டமாக இருந்தாலும், அந்தத் திசைக்காட்டி முள்ளை நீங்கள் விரும்பும் எந்தப் திசையிலும் திருப்பலாம், அது உடனே திரும்பிச் சரியாக அந்தத் துருவ நட்சத்திரத்தையே சுட்டிக்காட்டும். அது ஒரே வழி. 40 நாம் துன்பத்தில் இருக்கும்போது, கிறிஸ்துவை நம்பும்போது, ஒன்று நிச்சயம்: நமக்குத் தேவையான எல்லாவற்றிலிருந்தும் விடுவிப்பதற்கும், அந்தத் துருவ நட்சத்தி ரத்திற்கும் நம்மை வழிநடத்தும் வார்த்தைக்குப் பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சுட்டிக் காட்டுவார். அவரே நமது 'அப்ஸ்லூட்' (உறுதியான ஆதாரம்). 41 வனாந்தரத்தில் வழிதவறிய மனிதனுக்கு, திசைக்காட்டிதான் அவனை வெளியேற வழிநடத்தும் பொருளாக இருக்கிறது. நாம் துன்பத்தில் இருக்கும்போது, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; அது துருவ நட்சத்திரத்தைப் போலவே உறுதியானது. உலகம் அதன் நிலையில் நின்று சுழலும் வரை, துருவ நட்சத்திரம் அதன் இடத்திலேயே இருக்கும். 42 நித்தியம் இருக்கும் வரை, கிறிஸ்துவே எப்போதும் இரட்சகராகவும், ஒவ்வொரு பிரச்சனை, ஒவ்வொரு கருத்து வேறுபாடு, ஒவ்வொரு சோதனை, எல்லாவற்றிலிருந்தும் வெளியேறும் வழியாகவும் இருப்பார். ஆகையால் நாம்... நாம் அவருடன் கட்டப் பட்டிருக்கும்போது, உலகத்தாரைப் போல, "ஓ, இதைப் பற்றி நாம் என்ன செய்வோம்? அதைப் பற்றி என்ன செய்வோம்?" என்று பதற்றமடைந்து குழம்பிப் போவதில்லை. நாம் நங்கூரமிடப்படாதது போலவே தோன்று கிறோம். ஆனால் தன் ஆத்துமாவை கிறிஸ்து இயேசுவுக்குள் நங்கூரமிட்டு, தன் நம்பிக்கையை அங்கே வைத்திருக்கிற மனிதன், தான் பிதாவினிடத்தில் அவருடைய நாமத்தில் எதைக் கேட்டாலும், "நான் அதைச் செய்வேன் என்று இயேசு சொன்னார்" என்பதை அறிந்திருக்கிறான். அது முடிவாகிவிட்டது. 43 அது... அது முடிவாகிவிட்டது. அதுதான் ஆமென். அதுதான் 'அப்ஸ்லூட்'. அதுதான் 'அல்டிமேட்' (இறுதி முடிவு). "என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதை அருளுவேன்" என்று இயேசு சொன்னபோது, இதோ, அதுதான் 'அல்டிமேட்'. அவ்வளவுதான். "நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்." அது முடிவாகி விட்டது. நாம் உண்மையிலேயே நங்கூரமி டப்பட்டு அதை விசுவாசித்து, அவரை நம்முடைய 'அப்ஸ் லூட்'டாக ஆக்கிக் கொண்டால் அவ்வளவுதான், பாருங்கள். ஏனென்றால், அவர் செய்கிறார். எல்லா பயத்திலிருந்தும் நம்மை விலக்கிக் காக்கிற 'அப்ஸ்லூட்' அவரே. நீங்கள் உண்மையிலேயே அந்த நித்தியன் கன்மலை யோடு கட்டப் பட்டிருக்கும்போது எந்த பயமும் இல்லை. 44 கப்பல் அலைகளால் எவ்வளவு கடுமையாகத் தாக்கப்பட்டாலும், அந்த நங்கூரம் அங்கே மலையின் உச்சியில் பிடித்துக் கொண்டிருக்கும் வரை மாலுமிக்கு எந்த பயமும் இல்லை. ஏன், நிச்சயமாக. கப்பல் மேலேதான் நிற்கும் என்பதை அவன் அறிவான். அது எங்காவது ஒரு பாறைக்கு எதிராக மோதப்போவதில்லை. அது ஏதோ ஆழமற்ற நீரில் சிக்கி கவிழ்ந்துவிடாது, ஏனென்றால் அதற்கு ஏதோ ஒரு மலையின் உச்சியில் 'அப்ஸ்லூட்' நங்கூரமிடப்பட்டுள்ளது. 45 ஒரு மனிதன் விசுவாச ஜெபத்தை ஏறெடுத்து, "வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தை ஒழிந்து போகாது" என்கிற தேவனுடைய வார்த்தையில் அங்கே தன் ஆத்துமாவை நங்கூரமிட முடிந்தால், அங்கே பயம் இல்லை. அவர்கள் வரட்டும், அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும். நம் விசுவாசம் தேவன் பேரில், தேவன் பேரில் மட்டுமே இருக்கிறது. நாம் அதை விசுவாசிக்கிறோம். 46 இந்தத் தேசத்தின் பந்தியில் அமரும் முறைகள் (table manners) ஒரு பெண்ணின் வார்த்தையைச் சார்ந்திருந்த ஒரு காலம் இருந்தது. அவள் பெயர் எமிலி போஸ்ட் என்று அழைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். பந்தியில் அமரும் முறைகளுக்கு அவளே 'அப்ஸ்லூட்'டாக இருந்தாள். எமிலி போஸ்ட், "உங்கள் பீன்ஸை கத்தியால் எடுத்துச் சாப்பிடுங்கள்" என்று சொன்னால், அவ்வளவு தான். ம்ம். அவ்வளவுதான், ஏனென்றால் பந்தியில் அமரும் முறைகளுக்கு அவளே 'அப்ஸ்லூட்'டாக இருந்தாள். "உங்கள் சாசரில் காபியை ஊற்றி, நீங்கள் செய்தது போலவே உறிஞ்சி குடியுங்கள்" என்று அவள் சொன்னால், அது கேட்பதற்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும், அதுதான் அப்போதும் 'அப்ஸ்லூட்'. பந்தியில் அமரும் முறைகளுக்கு அவளை 'அப்ஸ்லூட்'டாக எடுத்துக்கொண்டதால் எல்லோரும் அதற்குப் பணிந்தார்கள். 47 நாம் என்ன செய்தாலும் நமக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். நாம் எதையாவது சாதிக்கப் போகிறோம் என்றால், நமக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். 48 ஜெர்மனியில் ஹிட்லரின் வார்த்தை ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருந்த ஒரு காலம் இருந்தது. வேறு யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஹிட்லரின் வார்த்தை ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருந்தது. "அவர்கள் சாக வேண்டும்" என்று அவர் சொன்னால், அவர்கள் சாக வேண்டும். "அவர்கள் வாழ வேண்டும்" என்று அவர் சொன்னால், அவர்கள் வாழ்வார்கள். "நாங்கள் போருக்குச் செல்கிறோம்" அல்லது "நாங்கள் போருக்குச் செல்லவில்லை," என்று அவர் சொன்னால், நாங்கள் எதைச் செய்தாலும், அவருடைய வார்த்தை ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருந்தது. 49 இத்தாலிக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்த ஒரு காலம் இருந்தது. அது அவர்களின் சர்வாதிகாரி முசோலினி என்ன செய்யச் சொன்னாரோ அந்த வார்த்தையாக இருந்தது. அவரை அழைத்துச் செல்ல அவரது ஓட்டுநர் ஒரு நிமிடம் முன்னதாக வந்தார் என்று அவர்கள் சொன்னார்கள். அவர் அவனைச் சுட்டுக் கொன்றார். ஏன்? "நீ ஒரு நிமிடம் முன்னதாக இங்கே இருப்பதை நான் விரும்பவில்லை. சரியான நேரத்தில், துல்லி யமாக இங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். பாருங்கள்? அவருடைய வார்த்தை 'அப்ஸ் லூட்'டாக இருந்தது. இத்தாலி முழுவதும் அதற்குப் பணிந்தது. 50 எகிப்தில் பார்வோன் ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் பாருங்கள்... 51 ஆனால் அவர்கள் எடுத்த இந்த முடிவுகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப் பட்ட முடிவுகள், அவை அனைத்தும் விழுந்து போயின. ஏன்? ஏனென்றால் அவை மனித உயிருக்கான தேவனுடைய வார்த்தைக்கு இசையவில்லை. இது நங்கூரமிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் நம்புகிறேன். மனித உயிரைக் காப்பாற்ற நாம் எதிர்பார்த்தால், நாம் தேவனுடைய வார்த்தை யுடனும் மனித உயிருக்கான தேவனுடைய திட்டத்துடனும் இசைந்து வர வேண்டும். நீங்கள் இதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி, அதை அவருடைய வார்த்தையில் கண்டுபிடித்து, அதை விசுவாசிப்பதுதான். 52 இப்போது, அந்த பார்வோன்கள், நான் வெகு காலத்திற்கு முன்பு எகிப்தில் இருந்தேன், பார்வோன் பூமியின் அரசனாக அமர்ந்திருந்த இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் இருபது அடி ஆழத்திற்குத் தோண்ட வேண்டியிருந்தது என்று நான் நினைக்கிறேன். 53 பெரிய ஏரோதுக்கள், மற்றும் பலர், அந்த வரிசையில் கடந்து சென்றவர்கள், அவர்களுடைய ராஜ்யங்கள் வீழ்ந்து மறைந்து போனதை நாம் காண்கிறோம். 54 ஆனால் எல்லா ராஜ்யங்களுக்கும் மேலான ஒரு ராஜ்யம் இருக்கிறது. அது வானங்களில் மிக உயரத்தில் இருப்பதால் அது ஒருபோதும் ஒழிந்து போகாது. அங்கே ஒரு ராஜா வீற்றிருக்கிறார், அவர் எதிலாவது தனது முடிவை அறிவிக்கும்போது, அந்த முடிவை நாம் விசுவாசித்தால், அது ஓர் 'அப்ஸ்லூட்' ஆகும். வேறு யார் என்ன சொன்னாலும் அது அப்படித்தான் இருக்கப் போகிறது. அது எப்போதுமே அப்படித்தான். 55 இப்போது, நமது உச்ச நீதிமன்றம் (Supreme Court). நமது உச்ச நீதிமன்றம், அது ஓர் 'அப்ஸ்லூட்', அனைத்து வழக்குகளுக்கும் முடிவு அதுவே. இப்போது, நமக்கு அது இருக்க வேண்டும். சில சமயங்களில் அதன் தீர்ப்புடன் நாம் உடன்படாமல் இருக்கலாம். ஹிட்லரின் தீர்ப்புடன் அவர்கள் உடன்படாதது போல. ஆனாலும் நமக்கு இந்த 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். தேசத்திற்கும் வழக்கு களுக்கும் 'அப்ஸ்லூட்' என்பது உச்ச நீதிமன்றம்தான். நமது உள்ளூர் நீதிமன்றங்கள் எதை வேண்டுமானாலும் விசாரித்துத் தீர்ப்ப ளிக்கலாம், ஆனால் உச்ச நீதிமன்றம் எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி செய்கிறது. நமக்கு அது இருக்க வேண்டும். ஒரு தேசமாக, அதன் தீர்ப்பு நமக்குத் தேவை, ஏனென்றால் ஒரு தேசம் உச்ச நீதிமன்றம் என்ற இந்த 'அப்ஸ்லூட்'டுடன் இணைக்கப்பட்டுள்ளது. சரி. எல்லாவற்றிற்கும் ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். 56 ஒரு சாதாரண பந்து விளையாட்டுக்கு (Ball game) ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆம். ஒரு பந்து விளையாட்டின் 'அப்ஸ்லூட்' என்ன? ஒரு நடுவர் (Umpire). நடுவர் இல்லை என்றால் என்ன ஆகும், பாருங்கள், ஒரு நடுவர்? நீங்கள் எங்கே நின்று கொண்டிருந்தாலும், எந்த நிலையில் இருந்து பார்த்து, "அது ஒரு பால் (Ball)," என்று நீங்கள் சொன்னாலும், அவர், "அது ஒரு ஸ்ட்ரைக் (Strike)," என்று சொன்னால், சரி, அதுதான் அது, அது ஒரு ஸ்ட்ரைக். ஏன்? ஏனென்றால், கேலரியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும், வேறு யார் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தை யின்படி அது ஒரு ஸ்ட்ரைக், ஏனென்றால் அவர் அதை ஸ்ட்ரைக் என்று அழைத்தார், அவரே நடுவர். இப்போது, நடுவர் இல்லை என்றால் என்ன ஆகும்? அங்கே ஒரு பெரிய கூச்சலும், எல்லாம் குழப்பமுமாக இருக்கும், உங்களால் பந்து விளையாட்டை நடத்த முடியாது. ஆகையால், ஒரு பந்து விளையாட்டை நடத்த உங்களுக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்க வேண்டும். 57 இப்போது, போக்குவரத்து விளக்கில் ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும், போக்கு வரத்திற்கு அது ஓர் 'அப்ஸ்லூட்'. போக்குவரத்து விளக்கு இல்லை என்றால் என்ன ஆகும்? அல்லது போக்குவரத்து விளக்கு எரியாமல் இருந்து, நீங்கள் தெருவில் ஓடினால்? ஒரு நபர் இந்த வழியாக வந்து, "இப்போது, நான்தான் முதலில் இங்கே இருந்தேன். நான் தான் செல்ல வேண்டும்," என்று சொன்னால். மற்றொருவர், "எனக்கு வேலைக்குத் தாமதமாகிறது," என்று சொன்னால். போக்குவரத்து நெரிசலைப் பற்றிப் பேசினால், உங்களுக்கு உண்மையிலேயே அது ஏற்படும். ஆனால், பாருங்கள், போக்குவரத்து விளக்கு அதைத் தீர்த்து வைக்கிறது. அதுதான் 'அப்ஸ்லூட்'. விளக்கு பச்சையாக இருந்தால், போ. சிவப்பாக இருந்தால், நில். அப்படி ஒரு போக்குவரத்து விளக்கு என்று எதுவும் இல்லை என்றால், நமக்குப் போக்கு வரத்து நெரிசல்கள் ஏற்படும். 58 அதுதான் இன்றைய கிறிஸ்தவ விசுவாசத்தில் உள்ள பிரச்சனை. நம்மிடம் அதிகமான போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன, எல்லோரும் தங்களுக்கென்று சொந்த 'அப்ஸ்லூட்'டை உருவாக்கிக் கொள்கிறார்கள். 59 (ஆனால்), நம்மிடம் ஒரே ஓர் 'அப்ஸ்லூட்' இருக்கிறது, அது உயிருள்ள தேவனுடைய வார்த்தை. வேறு யார் என்ன சொன்னாலும் அது அதை என்றென்றைக்குமாகத் தீர்த்து வைக்கிறது. 60 நியாயாதிபதிகளின் நாட்களில் இருந்தது போல, எல்லோரும் தங்களுக்கென்று சொந்த 'அப்ஸ்லூட்'டை வைத்திருக்கும் நிலைக்கு இது கிட்டத்தட்ட வந்துவிட்டது. ஆனால் பார்வோன்கள் மற்றும் பிறரைப் போல அது அனைத்தும் தோல்வியடைகிறது. 61 ஆனால் தேவனுடைய 'அப்ஸ்லூட்' அவருடைய வார்த்தையே. அவர் அதைக் கொடுக்கிறார், "வானமும் பூமியும் ஒழிந்து போம், ஆனால் அது ஒருக்காலும் ஒழிந்து போகாது." நான் அதை விரும்புகிறேன். 62 இப்போது, நமக்கு அதிக நேரம் இல்லை, ஆகையால், இன்று இரவு நாம் நிற்பது போல மரணம் நெருங்கியிருந்த நேரத்தில் நெருக்கடிக்குள் வந்த ஒருசில நபர்களைச் சில நிமிடங்கள் நாம் பார்ப்போம், அவர்கள் ஓர் 'அப்ஸ்லூட்'டை எடுத்துக் கொண்டார்கள். அவர்களில் சிலரை நாம் பேட்டி காண்போம். 63 நமக்குத் தெரிந்த ஒரு பழைய கதைக்குத் திரும்பிச் செல்வோம், பாவம் உலகில் குவிந்து, தேவன் அதனால் வெறுத்துப்போய் சோர்ந்து போன நாட்களில், உலகம் அழிக்கப் படவிருந்தது. தேவன் நோவாவுக்கு ஓர் 'அப்ஸ்லூட்'டைக் கொடுத்தார், அது அவருடைய வார்த்தை. அது எப்படியிருந்தாலும், அந்த 'அப்ஸ்லூட்' மக்களைக் காப்பாற்றுவதாக இருந்தது. உலகம் சாகப்போகிறது என்பதை நோவா அறிந்திருந்தார். மக்களை மரணத்திலிருந்து காப்பாற்ற, தேவன் அவருக்கு 'அப்ஸ்லூட்'டைக் கொடுத்தார், அது அவருடைய வார்த்தையே. இப்போது, நோவா காலத்தில் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்ற இருந்த 'அப்ஸ்லூட்' என்ன? அது தேவனுடைய வார்த்தை. வேறு யார் என்ன சொன்னாலும், அதுதான் 'அப்ஸ்லூட்'டாக இருந்தது. 64 அறிவியல் என்ன சொன்னது, "மேலே மழை இல்லை. நாங்கள் எங்கள் கருவிகளால் நிலவை நோக்கிச் செலுத்திப் பார்க்கிறோம். அங்கே மழை இல்லை. மழை எப்படிக் கீழே வரும்?" மழை பெய்யும் என்று தேவன் சொன்னால், அவர் சொன்னபடி தேவன் வானத்தில் மழையை வைக்க முடியும். 65 மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பேழையைத் தயார் செய்வதில் நோவா தன் வேலையில் நிம்மதியாக ஈடுபட்டார். ஏனெனில், இந்த 'அப்ஸ்லூட்'டுக்கான, தேவன் ஏற்படுத்திய வழியை மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற ஓர் 'அப்ஸ்லூட்' மக்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. 66 எனவே, சில சமயங்களில், நாம் 'அப்ஸ்லூட்'டை ஏற்றுக்கொண்ட பிறகு... இந்தக் குழந்தைகளின் பெற்றோருக்காக நான் இதைச் சொல்ல விரும்புகிறேன், ஒரு கணத்தில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இதுதான். இப்போது, அந்த... 67 சில நேரங்களில், நாம் அதை ஏற்றுக்கொண்ட பிறகு, நாம் அதை உண்மையிலேயே நம்புகிறோமா என்று பார்க்க நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். நாம்-நாம்... தேவன் வழக்கமாக அதைச் செய்கிறார். தேவன் கிரியை செய்கிறார்... 68 அவரால் தன் திட்டத்தை மாற்ற முடியாது, ஏனென்றால் அவருடைய வார்த் தையே அவராக இருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவ ராயிருக்கிறார்." எனவே, அது எப்போதுமே தேவன்தான். 69 செயல்படும்படி ஒரு காட்சிக்கு அவர் அழைக்கப்படும்போது, அவர் எடுக்கும் முடிவு, அந்த முடிவுடனே அவர் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அவரால் அதை மாற்ற முடியாது, ஏனென்றால் அவர் எல்லை யற்றவர் (infinite). 70 இப்போது, நான் என் முடிவை மாற்றலாம், நீங்கள் மாற்றலாம், ஏனென்றால் நாம் எல்லைக்குட்பட்டவர்கள் (finite). ஆகையால், நாம் தவறுகள் செய்கிறோம். 71 ஆனால் தேவன் தன் முடிவை மாற்ற முடியாது, ஏனென்றால் அவர் எல்லையற்றவர், அவருடைய-அவருடைய முடிவு எப்போதும் பரிபூரணமானது. "நான் இங்கே தவறாக இருந்துவிட்டேன், என் முடிவை நான் மாற்றிக்கொள்வேன்," என்று அவரால் சொல்ல முடியாது, ஏனென்றால் அது தேவன் மாறக்கூடியவர் என்பதைக் காட்டும். தேவன் மாற முடியாது, அவருடைய வார்த்தையும் மாற முடியாது. அவர் எப்போதும் மாறாதவர். 72 எனவே, நோவா தேவனுடைய 'அப்ஸ்லூட்'டை (ஓர் உறுதியான நிலையை) ஏற்றுக்கொண்ட பிறகு, தேவன் அவருக்கு ஒரு சோதனையைத் தந்தார். நோவா பேழைக்குள் சென்றார். தேவன் அவருக்குப் பின்னால் கதவை அடைத்தார். சந்தேகமே இல்லாமல் அவர்கள், "இப்போது, காலையில், கரிய மேகங்கள் இருக்கும். இடி மற்றும் மின்னல் இருக்கும், மழை பெய்யும்" என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், உங்களுக்குத் தெரியும், மறுநாள் சூரியன் எப்போதும் போலவே பிரகாசமாக உதித்தது. 73 எல்லைக்கோட்டில் இருந்த விசுவாசிகள், "நாங்கள் மேலே போவோம். அந்த முதியவர் சொன்னது சரியாக இருந்திருக்கலாம். எனவே, அங்கே மேலே கொஞ்சம் மழை இருக்கலாம் என்று அறிவியல் சொன்னது தவறாக இருக்கலாம்" என்று சொல்லியிருப்பார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். ஆனால், நினைவில் கொள்ளுங்கள், அதுவரை மழை பெய்ததே இல்லை. 74 ஆனால், பின்னர், இரண்டாவது நாளும், சூரியன் எப்போதும் போலவே பிரகாசமாக இருந்தது; மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏன் ஏழாம் நாள் வரையிலும் கூட. ஆனால் நோவா மேல் அறையில் ஏறிக்கொண்டார், அதனால் அவரால் வானத்தைப் பார்க்க முடிந்தது. அந்த ஏழாவது காலையில், தேவனுடைய இரட்சிப்பின் 'அப்ஸ்லூட்' வழியை, அதாவது மக்களின் உயிரைக் காப்பாற்றும் வழியை மக்கள் நிராகரித்திருந்த ஒரு நேரம் வந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது, சாக்கடைகள் நிரம்பின. அந்தப் படகு மேலே எழும்பத் தொடங்கியது, அது நோவாவையும் மற்றவர் களையும் பாதுகாப்பிற்குள் கொண்டு சென்றது. நிச்சயமாக, ஏனென்றால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை, அந்த 'அப்ஸ் லூட்'டை, தேவனுடைய வாக்குறுதியின் வார்த்தையை நம்பிக் கொண்டிருந்தார்கள். 75 அது பார்ப்பதற்கு எவ்வளவு மோசமாகத் தோன்றினாலும், எவ்வளவு இருளாக இருந் தாலும், உங்கள் 'அப்ஸ்லூட்'டைத் தொடர்ந்து விசுவாசியுங்கள். 76 மோசே, ஏன், அவர் அந்த ஏழை எபிரேயர்களின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்தார். இன்று இரவு நாம் காப்பாற்ற முயற்சிக்கும் இந்த இரண்டு குழந்தைகளைப் போலவே அவர்களும் மோசமான நிலையில் இருந்தார்கள், அல்லது கிட்டத்தட்ட அதே மோசமான நிலையில் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள், அவர்கள் விரும்பிய போதெல்லாம் அவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு கொன்றார்கள். அது தேவனுடைய சித்தம் இல்லை என்று மோசே தன் இருதயத்தில் உணர்ந்தார். எனவே, அவர் கல்வியின் மூலம் அதைச் செய்ய முயன்றார். அவர் தனது சொந்த முயற்சிகளின் மூலம் அதைச் செய்ய முயன்றார், ஆனால் அவர் பரிதாபமாகத் தோல்வியடைந்தார் என்பதைக் கண்டறிந்தார். சரியில்லாத ஒன்றை அவரே செய்தார், ஏனென்றால் அவர் மற்றொரு மனிதனின் உயிரைப் பறித்தார். அது சரியல்ல. 77 பின்னர், அவர் வனாந்தரத்திற்குச் சென்று நாற்பது ஆண்டுகள் அங்கேயே இருந்தார். ஆனால், ஒரு நாள், அவர் பாலைவனத்தின் பின்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு முட்செடியில் ஒரு ஒளி இருந்தது. மோசே இந்த ஒளியின் அருகே சென்றபோது, இந்த முட்செடியில் தங்கியிருந்த இந்த அக்கினி ஸ்தம்பத்திலிருந்து தேவனுடைய சத்தம் அவரிடம் பேசி, "மோசே, மோசே" என்று அழைத்தது. அவர், "இதோ, இருக்கிறேன் ஆண்டவரே" என்றார். 78 அப்பொழுது அவர், "உன் காலணிகளைக் கழற்றிப்போடு, ஏனெனில் நீ நிற்கிற பூமி பரிசுத்தமானது. என் மக்களின் பெருமூச்சுகளை நான் கேட்டேன். அவர்களின் ஜெபக் கூட்டத்தை நான் கேட்டேன். நான் அவர்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தேன் என்பதை நினைவு கூர்ந்தேன்" என்றார். ஆ, இன்று இரவு அது கிறிஸ்தவ விசுவாசிகளின் இருதயங்களில் அக்கினியை மூட்டியிருக்க வேண்டும்! "நான் தேவன். நான் வாக்களித்ததை நினைவு கூருகிறேன்." அந்தச் சத்தம் எவ்வளவு வேதப்பூர்வமாக இருந்தது! மேலும் அவர், "மோசே, அவர்களை விடுவிக்க நான் உன்னை அங்கே அனுப்புகிறேன்" என்றார். மோசே... 79 நிச்சயமாக, நான் ஆரம்பத்தில் சொன்னது போல, நீங்கள் தேவனுடைய அந்த 'அப்ஸ்லூட்'டை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்களை, சில சமயங்களில் மக்களின் பார்வையில் அபத்தமான காரியங்களைச் செய்ய வைக்கிறது. எகிப்தியர்களிடமிருந்து ஓடிப்போன ஒரு மனிதனை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா, மறுநாள் காலையில், இந்த 'அப்ஸ்லூட்'டை கண்ட பிறகு... 80 தேவனுடைய இந்த வார்த்தை அவருக்கு ஒரு நேர்மறையான சாட்சியாகப் பேசியது, ஏனென்றால் அது வார்த்தையாக இருந்தது. அங்கே வாக்குறுதி இருந்தது, மேலும் சிருஷ்டிகராகிய மாபெரும் தேவன் மோசேயின் முன்னிலையில் ஒரு அற்புதத்தைச் செய்து, தான் சிருஷ்டிப்பின் தேவன் என்பதை எப்படிக் காண்பித்தார் என்பதற்கான நிரூபணமும் இருந்தது. 81 மோசே, மறுநாள் காலையில், தன் மனைவியை அழைத்து ஒரு கோவேறு கழுதையின் மேல் ஏற்றினார், அவளுடைய இடுப்பில் குழந்தையும் இருந்தது. எண்பது வயதான அவர், இடுப்பு வரை தாடி தொங்க, வழுக்கைத் தலை மின்ன, கையில் ஒரு கோணலான தடியுடன், தன்னால் முடிந்தவரை சத்தமாகக் கூச்சலிட்டுக் கொண்டு எகிப்தை நோக்கிச் சென்றார். "எங்கே போகிறீர்கள், மோசே?" "நான் எகிப்தைக் கைப்பற்ற கீழே போகிறேன்." "கைப்பற்றவா?" 82 ஒரு தனி மனிதப் படையெடுப்பு! ஏன்? அவருக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்தது. அவரிடம் ஏதோ ஒன்று இருந்தது. அவர் நிற்கக்கூடிய தேவனுடைய வார்த்தை அவரிடம் இருந்தது. ஒரு கோவேறு கழுதையும், கையில் ஒரு தடியும் வைத்திருந்த எண்பது வயது முதியவர். அது மட்டுமே அவரிடம் இருந்தது. இன்று ரஷ்யாவிற்கு ஒரு தனி மனிதன் படையெ டுப்பதைப் போல. ஆனால் அவர் கீழே போய் அதைக் கைப்பற்றினார், ஏனென்றால் அவருக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்தது. அவர் தேவனிடம் பேசியிருந்தார். அவர் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருந்தார். அவர்... விஷயம் என்னவென்றால், அவர் அதைச் செய்தார். சரி. ஏன்? அவருடைய வாழ்நாள் முழுவதும் அது அவருடன் இருந்தது. அது ஓர் 'அப்ஸ்லூட்'டாக இருந்தது. 83 தேவனுடைய இயற்கைக்கு அப்பாற் பட்டதை எந்த ஒரு அறியாமை வாதியோ (agnostic) அல்லது அவிசுவாசியோ ஒருபோதும் விளக்க முடியாத அந்தப் பரிசுத்தமான மணலில் தானாகவே நடந்திருந்தாலன்றி, எந்த மனிதனுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப் பீடத்தில் ஏற உரிமை இல்லை. இயேசு தம் சீடர்களைப் பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை, அவர்கள் அவரை எவ்வளவு நன்றாக அறிந்திருந்தாலும் சரி; அவர்கள் எருசலேம் நகருக்குச் சென்று, உன்னதத்திலிருந்து வரும் வல்லமையால் தரிப்பிக்கப்படும் வரை அங்குக் காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு அந்த அனுபவம் இருக்க வேண்டும். 84 தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை அறிந்திருந்தும், இந்த நோக்கத்திற்காகவே எழுப்பப்பட்டோம் என்பதை அறிந்திருந்தும், அந்தத் தனிப்பட்ட தொடர்பு இல்லாமல், அந்த 'அப்ஸ்லூட்' இல்லாமல், தான் அங்கே கீழே போகும்போது இந்த மக்களுக்காக விடுதலையைப் பெற்றுத்தரப் போகிறோம் என்பதை அவருக்கு நிரூபிக்கும் ஏதோ ஒன்று இல்லாமல் மோசே போகவில்லை. அவர் ஒருபோதும் பழையபடி இருக்க வில்லை. அவருக்கு 'அப்ஸ்லூட்' இருந்ததால் அவர் அங்கே கீழே சென்றார், தேவன் தன்னிடம் என்ன செய்யச் சொன்னாரோ அதை அப்படியே செய்தார். அவர் பாம்புக ளையோ அல்லது கோல்களையோ கீழே போட்டபோது, அவை பாம்பாக மாறியபோது அவர் இருதயத்தில் எந்தப் பயமும் இல்லை. மாம்சரீதியான பாவனையாளர்கள் (imper sonators) தங்கள் வகையான ஊழியத்துடன் வந்து, கீழே போட்டு அதே காரியத்தைச் செய்தார்கள். மோசே தேவன் தன்னிடம் சொன்னதை மட்டுமே சரியாகச் செய்தார். தரித்து நின்று தேவனுடைய மகிமையைப் பார்ப்பதைத் தவிர அவருக்குச் செய்ய வேறொன்றும் இருக்கவில்லை. பின்னர் தேவன் அவருடைய பாம்பை எடுத்து மற்றவற்றை விழுங்கச் செய்ததை நாம் காண்கிறோம். அப்படித்தான் அது செய்யப் படுகிறது. இதைச் செய்யச் சொன்ன தேவன், மோசமான சூழ்நிலையில் தன்னைப் பாதுகாக்க வல்லவர் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 85 இன்று இரவு நாம், அந்த வாலிபன் கிறிஸ்துவுக்குத் தன் இருதயத்தைக் கொடுத்தான் என்ற அடிப்படையில், தேவன் சாத்தியமில் லாதவற்றைச் சாத்தியமாக்க முடியும் என்கிற இந்த 'அப்ஸ்லூட்'டின் மீது நிற்க முடியாதா! அவரால் நீதிபதிகளின் இருதயங்களை மாற்ற முடியும்! நாம் ஏன் மற்ற விஷயங்களைக் குறித்து அவ்வளவு பதற்றத்துடன் தாவிக் கொண்டிருக்கிறோம்? முதலில் தேவனை எடுத்துக் கொள்வோம். அதை வாக்குறுதிக்குத் திருப்பிக் கொண்டு வாருங்கள். தேவன் அதை வாக்களித்தார், அவர் அதைச் செய்வார் என்று. 86 எனவே, நினைவில் கொள்ளுங்கள், மோசே தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை நம்பியதால் எப்போதும் ஒரு வித்தியாசமான நபராக இருந்தார். அவருக்கு நிரூபிக்கப்பட்ட ஒரு வாக்குறுதி இருந்தது. நாம் எத்தனை பேரைச் சொல்லலாம்? நமக்கு நேரம் இல்லை. 87 இன்று ஒரு குறிப்பை எழுதும்போது, நான் இங்கே தானியேலைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தேன், வேறொரு தேவனிடம் ஜெபிப்பது அவனுக்கு மரண தண்டனையாக இருந்தது. ஆனால் அவன் தேவனுடன் தொடர்பில் இருந்தான், தேவன் தன்னைப் பாதுகாக்க வல்லவர் என்பதை அவன் அறிந்திருந்தான். 88 எபிரேய வாலிபர்கள், அவர்கள் அக்கினிச் சூளையில் வீசப்பட்டார்கள், சூளை எப்போதையும் விட ஏழு மடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்ட வெப்பத்தில் எரிக்கப் படவிருந்தார்கள். அந்த எபிரேய வாலிபர்கள் தேவனை நம்பினார்கள். அவர்கள், "எங்கள் தேவன் எங்களை இந்தச் சூளையிலிருந்து விடுவிக்க வல்லவர்" என்று சொன்னார்கள். ஏன்? அவர்களுக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்தது. அவர்களிடம் தேவனுடைய வார்த்தை இருந்தது. 89 அந்த எபிரேய வாலிபர்களை அக்கினிச் சூளையின் மரண அறையிலிருந்து விடுவிக்க முடிந்த தேவன், அங்கே மரண அறையில் படுத்திருக்கும் இந்தச் சிறிய யூத பையனை விடுவிக்க இன்னும் எவ்வளவு வல்லவ ராயிருக்கிறார்? அவர் இன்னும் எவ்வளவு அதிகமாக... அவர் எப்போதும் இருந்த அதே யேகோவா தேவனாகவே இன்னும் இருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே, "நேற்றும் இன்றும் என்றும் மாறாத" அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார் என்பதை நம்மால் உணர முடியும். அப்படியானால், கிறிஸ்தவர்கள் தேவனுடைய மாறாத கரத்தைப் பற்றிக் கொண்டு, முழுச் சூழ்நிலையையும் மாற்ற முடியும். ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. அதைத்தான் நாம் செய்ய விரும்புகிறோம். 90 யோசுவாவைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? அவர் யோர்தானை எப்படிக் கடக்கப் போகிறார்? ஏப்ரல் மாதத்தில், தண்ணீர் அப்படிப் பெருகியிருக்கும்போது, தேவன் ஒரு விசித்திரமான இராணுவ மனிதரைப் போலத் தோன்றினார். ஆனால் அவர் யோசுவாவிடம், "பெட்டியை எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்" என்று சொன்னார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் அதுதான். தேவன் யோர்தானைப் பின்னுக்குத் தள்ளி உலர்ந்த தரையை உண்டாக்கினார், அவர்கள் நடந்து சென்று விடுவிக்கப்பட்டார்கள். அது எப்படி இருந்தது! 91 யோசுவா, "நானும் என் வீட்டாரு மோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்று சொன்னதில் வியப்பில்லை. 92 அந்தச் சிறந்த கோத்திரத் தலைவராகிய தாவீது, அவரைப் பற்றிப் பேச நாம் எவ்வளவு விரும்புகிறோம், நமக்கு நேரமில்லை, ஆனால், பல சமயங்களில், தாவீது மற்றும் அவருடைய பாவத்தைப் பற்றிச் சற்று முன்பு ஒருவர் பேசுவதை நாம் கேட்டோம், ஆனால், அதெல்லாம் மன்னிக்கப்பட்டபோது, அவர் யுத்தத்திற்குச் செல்லும்போது, நாம் உலகத்தில் சொல்வது போல, "நிலைமை மிகக் கடுமையாக இருந்தபோது (chips were down)," எதிர்ப்பு பெரிதாக இருந்தபோது, தாவீது அங்கே மரத்தடியில் படுத்து, வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தார், முசுக்கட்டைச் செடிகள் வழியாகச் செல்லும் சத்தத்தைக் கேட்கும் வரை, அதன் பிறகு அது மாறியது. தாவீது எழுந்து முன்னேறிச் சென்றார், ஏனென்றால் அவருக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருந்தது, தேவன் தனக்கு முன்பாகச் செல்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். 93 அங்கே கீழே இருக்கும் பரோல் வாரியத்திற்கு (parole board) தேவனை அனுப்பக்கூடிய விசுவாச ஜெபத்தை நம்மால் ஜெபிக்க முடியாதா? நிச்சயமாக, நம்மால் முடியும். நாம் அந்த 'அப்ஸ்லூட்'டைப் பற்றிக்கொண்டால் நம்மால் முடியும் என்று நாம் விசுவாசிக்கிறோம். 94 ஆபிரகாம் எப்படி இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தார்," ஏனென்றால் சாராளின் மூலமாகத் தனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கப்போவதாக தேவனிட மிருந்து அவருக்கு ஓர் 'அப்ஸ்லூட்' வாக்குறுதி இருந்தது. அவளுக்கு நூறு வயதாக இருந்தபோது, அல்லது அவருக்கு அந்த வயது இருந்தபோது, அவளுக்குத் தொண்ணூறு வயதாக இருந்த போது, "அவர் தேவனுடைய வாக்குறுதியைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவரானார்." நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று உரிமை கோருகிறோம். ஆபிரகாம்... 95 ஆபிரகாமின் நாட்களிலிருந்து வேதாகமம் எழுதப்பட்டிருக்கிறது, நமக்குப் பின்னால் இருக்கும் சாட்சிகள் அனைத்தும், யேகோவா தம் வார்த்தையைக் காப்பாற்றுகிறார், கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதைச் சொல் கின்றன. மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் அவரே மத்தியஸ்தர், அவரைத் தவிர வேறு மத்தியஸ்தர் இல்லை. "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினி டத்தில் எதைக் கேட்டாலும், அது அருளப்படும்" என்று வாக்களித்திருக்கிறார். நாமோ ஆபிரகாமின் பிள்ளைகள் என்று உரிமை கோருகிறோம். "ஆபிரகாம் தேவனை விசுவாசித் தபடியால், இருக்கிறவைகளை இல்லாதவை களைப் போல அழைத்தார்." நிச்சயமாக. நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். பவுலின் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை அவருடைய 'அப்ஸ்லூட்'டாக இருந்தது. அது அவரைக் கட்டியிருந்தது. 96 கிறிஸ்து உயிர்த்தெழுதலின் 'அப்ஸ் லூட்'டாக இருந்தார், நாம் இங்கே வாசித்தபடி. "அவர் தம்முடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டார் என்று தேவன் தாவீதுக்கு ஒரு ஆணையிட்டுச் சத்தியம் பண்ணினார்" என்று அவர் கூறினார். ஒரு ஆணை என்பது அனைத்துப் போராட்டங்களுக்கும் முடிவு. "அவர் தம்முடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டார், ஆனால் அவரை எழுப்புவார் என்று அவர் ஆணையிட்டார்." ஆகையால் அவர் தேவனை நம்பினார், சிலுவையில் அறையப்பட்டார்; மரித்தார், உயிர்த்தெழுந்தார், பரலோகத்திற்கு ஏறினார், ஏனென்றால் அவர் தேவனை விசுவாசித்தார். 97 அவர் ஒரு முன்மாதிரியை வைத்திருப்பதால், நம்மால் இன்னும் எவ்வளவு அதிகமாக அந்த 'அப்ஸ்லூட்'டை எடுத்துக் கொள்ள முடியும்! கிறிஸ்து அந்த ஒரே ஒரு வாக்குறுதியின் பேரில் அதை எடுத்துக்கொள்ள முடிந்தால், ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளுடன் நம்மால் இன்னும் எவ்வளவு அதிகமாக அதை எடுத்துக்கொள்ள முடியும்! நம் வழியைச் சுத்திகரிக்கவும், அவிசுவாசம் என்கிற பாவத்தால் நம்மைப் பிரித்திருந்த அந்தப் பெரும் இடைவெளியைக் கடந்து தேவனிடத்திற்குக் கொண்டு வரவும், அவரிடம் பேசுவதற்குத் தகுதியாக அவருடைய பிரசன்னத்திற்குள் நம்மை நேராகக் கொண்டு வரவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அங்கே இருக்கும்போது, அது இன்னும் எவ்வளவு அதிகமாக இருக்க முடியும்! ஆம். நமக்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். 98 அமெரிக்கா இளமையாக இருந்தபோது, நம்மிடம் உள்ள இந்தச் சிறந்த தேசத்தின் உயிருக்காக, வாழ்வுக்காக நாம் போராடிக் கொண்டிருந்தபோது இருந்த ஜார்ஜ் வாஷிங்டன் எனக்கு நினைவுக்கு வருகிறார், இப்போது நான் முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு விசுவாசி. வேலி ஃபோர்ஜில் (Valley Forge), அமெரிக்கப் வீரர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே காலணிகள் இருந்தன என்று எனக்குச் சொல்லப்பட்டது. குளிர்காலம் கடுமையாக இருந்தது, பூஜ்ய நிலை வானிலை, ஆறு உறைந்து போயிருந்தது. மறுபுறம் பிரிட்டிஷார் இருந்தனர். இந்தச் சிறிய தேசத்தின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. 99 அவர் என்ன செய்தார்? அவர் ஒரு கிறிஸ்தவர். அவர் இரவு நேரத்தில் வெளியே சென்று பனியில் முழங்கால்படியிட்டு, இடுப்பு வரை பனி நீர் நனைக்கும் வரை ஜெபம் செய்தார். தேவன் தனக்கு வெற்றியைக் கொடுப்பார் என்கிற அந்த 'அப்ஸ்லூட்'டை, தேவனிடமிருந்து பதிலை அவர் பெறும் வரை அங்கேயே தங்கி ஜெபம் செய்தார். 100 மறுநாள், வேலி ஃபோர்ஜ் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவர் டெலா வேரைக் கடந்தார், அரைகுறை ஆடைகளுடன், பாதி உறைந்துபோன, பனியில் வெறுங் கால்களுடன் இருந்த வீரர்களுடன் பனிக்கட்டி வழியாக முன்னேறினார். மூன்று துப்பாக்கித் தோட்டாக்கள் அவருடைய கோட் வழியாகச் சென்றபோது அவர் அதைத் தாங்கிக்கொண்டார். ஏன்? பதிலளிக்கப்பட்ட ஜெபம் என்கிற 'அப்ஸ் லூட்'டில் அவர் நம்பிக்கை வைத்திருந்தார். ஆமென். நம் தேசத்தின் பின்னணியே அப்படிப்பட்ட ஒரு விஷயத்தின் அடிப்படை யில்தான் அமைந்துள்ளது. 101 கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய மக்களுக்கு என்ன நேர்ந்தது? இது போன்ற ஒரு நேரத்தில் நாம் ஏன் கலங்குகிறோம்? நாம் கலங்காமல் இருப்போம். நாம் போர்வீரர்களாக இருப்போம். ஆம், ஐயா. 102 அந்தப் பதிலைப் பெறும் வரை அவர் ஜெபம் செய்தார். பின்னர், மேகமூட்டமான ஆறு இல்லை, வெறுங்கால் வீரர்கள் இல்லை, சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அவர்களால் அதை எதிர்கொள்ள முடிந்தது, ஏனென்றால் தேவன் அப்படிச் சொல்லியிருந்தார். எதிரியின் துப்பாக்கியிலிருந்து வந்த ஒரு தோட்டாவால் கூட அவரைக் கொல்ல முடியவில்லை. நிச்சயமாக. ஏன்? அவர் ஒரு ஜெபக் கூட்டத்தை நடத்தியிருந்தார். அவர் பதிலைப் பெற்றார். 103 ஒரு இரவு, அப்போஸ்தலனாகிய பேதுரு சிறையில் இருந்தபோது, மறுநாள் காலையில் அவர்கள் அவரைக் கொல்லப் போனார்கள், அது எவ்வளவு நன்றாக இருந்தது. இந்தச் சிறிய யூதர் இப்போது செய்யப் போவதைப் போல, அவரும் மரண தண்டனையின் கீழ் சாகப்போகிறார். ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? ஹியூஸ்டனில் நாம் இங்குச் செய்ய முயற்சிக்கும் அதே காரியத்தை அவர்கள் செய்தார்கள். அவர்கள் யோவான் மாற்குவின் வீட்டில் ஒரு ஜெபக் கூட்டத்தை உருவாக் கினார்கள். அவர்கள் ஜெபித்துக் கொண்டி ருந்தபோது, கர்த்தருடைய தூதன் சிறைச் சாலைக்குச் சென்று, சிறைக் கம்பிகளைத் திறந்து, வாசல்களைத் திறந்தார். அதற்கு அப்பாலும், பேதுருவை வெளியே அழைத்துக் கொண்டு, நேராக ஜெபக் கூட்டத்திற்கு வந்தார். 104 அதே தேவன் இன்றிரவும் ஜீவிக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் அதே தேவன் இல்லையென்றால், ஏதோ தவறு இருக்கிறது. நிச்சயமாக. 105 அது எதனால் செய்யப்பட்டது? ஒரு ஜெபக் கூட்டத்தினால், விசுவாசித்த, தேவன் தங்கள் சகோதரனை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பார் என்று விசுவாசித்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களால். அவர்கள் இரவு முழுவதும் தங்கி, முகங்குப்புற விழுந்து, அழுது ஜெபித்த கிறிஸ்தவர்கள். 106 சற்று நேரத்திற்கு முன்பு போதகர்களில் ஒருவர், தான் இரவு முழுவதும் அழுது மன்றாடப் போவதாகச் சொல்வதை நான் கேட்டது போல. இன்றைய பிரச்சனையே என்னவென்றால், மக்கள் சோர்ந்துபோகிறார்கள். அவர்கள் களைப்படைந்து, தூக்க கலக்கமடை கிறார்கள். அவர்களால் பத்து நிமிடக் கூட்டத்தில் கூட உட்கார முடிவதில்லை. சரி, ஏதோ தவறு இருக்கிறது. 107 நீங்கள் தேவனை நேசித்தால், சரி, நாம் மும்முரமாக இருக்க வேண்டும். அது நம்முடைய-நம்முடைய நம்பிக்கைகளாக, நம்மு டைய வாஞ்சைகளாக இருக்க வேண்டும். அது இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் அனைத்தும் கிறிஸ்துவின் அன்பில் இருக்க வேண்டும். ஆமென். நாம் மிகவும் சோம் பேறிகளாக அமர்ந்திருக்கிறோம். உலகம் நம் காலடியில் செத்துக்கொண்டிருக்கும்போது நாம் மிகவும் அக்கறையற்றவர்களாக அமர்ந்தி ருக்கிறோம். அதுதான் உண்மை. தேவன் இல்லாமல் மனிதர்களின் உயிர்கள் போய்க் கொண்டி ருக்கின்றன, நாம் அதைப் பற்றி மிகவும்-மிகவும் அக்கறையற்றவர்களாக அமர்ந்தி ருக்கிறோம். நாம் சபையைச் சார்ந்திருக்கும் வரை, அது மட்டுமே வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நாம் நினைக்கிறோம். 108 சில வாரங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட சபையில் கிறிஸ்துவின் வருகை யைப் பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் யாரோ ஒருவர் சபையின் பின்பகுதியில் என்னைச் சந்தித்து, "சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் மக்களைப் பயமுறுத்துகிறீர்கள்" என்று சொன்னார். நான், "நான் ஏன் அப்படிச் செய்கிறேன்?" என்று கேட்டேன். 109 அவர், "சரி, நீங்கள் கிறிஸ்துவின் வருகையைப் பற்றிப் பேசுகிறீர்கள். அது போன்ற விஷயங்களை நான் கேட்க விரும்பவில்லை. நான் வளர்க்க வேண்டிய ஒரு சின்ன பையன் வைத்திருக்கிறேன். பள்ளியில் படிக்கும் ஒரு பெண் இருக்கிறாள்" என்றார். 110 "ஓ," நான் சொன்னேன், "கிறிஸ்துவின் வருகைதான் என்னால் நினைக்க முடிந்த மிகவும் மகிமையான விஷயம்." நிச்சயமாக. பாருங்கள்? 111 "அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும் அனைவரும்" என்று வேதாகமம் சொன்னது. ஆ, என், இந்த பழைய அழிவுள்ள சரீரம் அழியாமையைத் தரித்துக்கொள்ளும் ஒரு நாளுக்காக, நான் வாழும் இந்தத் தொற்றும் நோய் கொண்ட வீடு (pesthouse), ஒரு கணப்பொழுதில், ஒரு இமைப்பொழுதில் மாற்றப்பட்டு, அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரமாக மாறும்! அது சபையின் இருதய வாஞ்சையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும், அக்கினி பற்றி எரிந்து, தெருக்களிலும் மற்ற எல்லா இடங்களிலும் பிரசங்கித்து, ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட முயற்சிக்க வேண்டும். நிச்சயமாக. 112 நாம் உரிமை கோருகிற அந்த 'அப்ஸ்லூட்'டுடன் நாம் உண்மையிலேயே கட்டப்பட்டிருக்கிறோமா என்று நான் வியப்படைகிறேன். நாம் சரியான விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்க்கிறோமா? நாம் நமது சபை மற்றும் நமது ஸ்தாபனம், நமது இணைப்புகளை மட்டுமே நம்பியிருந்தால்; உலகம் மாறும்போது, அதுவும் அதனுடன் சேர்ந்து, சுற்றியும் சுழன்றும் மாறுகிறது. 113 ஆனால் ஒருபோதும் மாறாத ஒரு நட்சத்திரம் இருக்கிறது. ஒருபோதும் மாறாத ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் தேவன். தேவன் மாற முடியாது. அவருடைய வார்த்தை மாற முடியாது. அவருடைய வேதாகமம் மாற முடியாது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்து, அவனுக்குள் கிறிஸ்து இருந்தால், அது ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒரு "ஆமென்" என்று முத்திரை குத்துகிறது. அதுதான் சரி. நிச்சயமாக. 114 ஓ, நிச்சயமாக, ஒரு ஜெபக் கூட்டம் தான் நமக்குத் தேவை. நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவனுடைய வார்த்தையாகிய இதே 'அப்ஸ்லூட்'டைப் பயன்படுத்த வேண்டும். தேவனுடைய வார்த்தையே கிறிஸ்தவனின் ஆதாரம். 115 இயேசு தம் வார்த்தையில், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வ தெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" என்று சொன்னார். அதைச் சிந்தித்துப் பாருங்கள். இதைவிட வேறு என்ன 'அப்ஸ்லூட்' உங்களுக்கு வேண்டும்? இதைவிட அதிகமான எதில் உங்களால் நம்பி இருக்க முடியும்? "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்." 116 அந்த நீதிபதியின் அல்லது அந்த பரோல் வாரியத்தின் இருதயத்தின் மீது கிரியை செய்யும்படி தேவனிடம் கேட்பதற்கு, அந்தச் சிறிய வாலிபனை அந்த மரண அறையிலிருந்து வெளியே கொண்டுவர, நாம் விசுவாசத்தோடு, விசுவாசித்து, இந்த ஜெபக் கூட்டங்களில் கேட்டால், நாம் அதைப் பெறுவோம். அது தான், நான் தேவனை அப்படி விசுவா சிக்கிறேன். 117 நான் தேவன் பேரில் வைத்திருக்கும் என் விசுவாசம், அதனால்தான் நான் இன்று இரவு இங்கே இருக்கிறேன். அதனால்தான் நான் வேறொன்றை ரத்து செய்துவிட்டு, இங்கே வந்தேன். என்னுடைய விசுவாசத்தை உங்களுடைய விசுவாசத்துடன் இணைப்பதற்காக நான் வந்திருப்பதால், இன்று இரவு நூற்றுக் கணக்கான மைல்கள் திரும்பிச் செல்ல வேண்டும், அரிசோனாவிலுள்ள டூஸானுக்கு (Tucson). அது ஒரு மனிதன். அது அங்கே படுத்திருக்கும் ஒரு ஆத்துமா. அது தேவையில் உள்ள ஒருவர். நாம் கிறிஸ்தவர்கள் ஒரு நிஜத்திற்கு, உண்மையான, கலப்படமற்ற விசுவாசத்திற்கு விழித்துக்கொள்ள வேண்டும், அதைத் தேவனுடைய வார்த்தை யோடு இணைத்து, அந்த வாக்குறுதிக்காக மன்றாட வேண்டும். ஆம், ஐயா. ஆ, என்! "நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்." 118 மேலும் மீண்டும், "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணினால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்பேன்." ஜெபக் கூட்டம், அதுதான் அது. 119 வழக்கறிஞர்களிடம் பேசுவதையும், வக்கீல்கள் அல்லது நீதிபதிகள் அல்லது பரோல் வாரியங்கள் அல்லது வேறு எவரிடமும் பேசுவதையும் நான் நம்புகிறேன். அது சரிதான். ஆனால், சகோதரரே, உங்கள் நம்பிக்கை, வெறும் மாம்சரீதியான மனிதர்களின் மனதை அல்லது மனிதர்களின் மனதை விட வேறொன்றுடன் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் நிச்சயமாக வருத்தத்துடன் ஏமாற்ற மடைவீர்கள். 120 ஆனால் தேவன் பதில் தரும் வரை நீங்கள் அங்கேயே தங்கி ஜெபிப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் உங்கள் விசுவாசத்தைக் கட்ட முடிந்தால், ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று உங்கள் இருதயத்தில் அறிந்துகொள்வீர்கள். 121 சவக்கிடங்கிலிருந்து மரித்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட்டதை நான் பார்த்தி ருக்கிறேன். குருடரின் கண்கள் திறக்கப் படுவதையும், செவிடன் காதுகள் கேட்கும்படி திறக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். சார்கோமா (sarcomas) புற்றுநோய், குஷ்ட ரோகம் கொண்ட புற்றுநோய் கேஸ்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமை யால் குணமாவதை நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், வாக்களித்த அந்த தேவன், தம் வாக்குறுதியைக் காப்பாற்ற வல்லவர் என்று விசுவாசிக்க அவர்களுக்கு விசுவாசம் இருந்தது. ஆபிரகாம் கொண்டிருந்தது போன்ற உண்மை யான, கலப்படமற்ற விசுவாசம் அது. 122 அங்கே கட்டுங்கள். அங்கேயே தங்கி ஜெபம் பண்ணுங்கள். சும்மா கீழே விழுந்து, "தேவனே, அந்தப் பாவம், சிறிய வாலிபனை விடுவித்து அவனை வீட்டிற்கு அனுப்புங்கள்" என்று சொல்லாதீர்கள். நாம் அனைவரும் அதை விரும்புகிறோம். ஆனால் ஏதோ ஒன்று நடக்கும் வரை நாம் அங்கேயே இருப்போம். ஆ! ஏதோ ஒன்று நடந்தபோது, பின்னர், அந்த உறுதிப்பாடு, இன்று இரவு இந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் இந்தச் சிறிய கைப்பிடியளவு மக்களுக்குள் இறங்கக்கூடும், நம்மிடையே இங்கேயே இறங்கக்கூடும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெட் கிப்பர்மனின் கேமராவால் இந்த ஹியூஸ்டனில் எடுக்கப்பட்ட அதே அக்கினி ஸ்தம்பமாகிய அந்த 'அப்ஸ்லூட்' இறங்கி வரும் வரை, அந்த முகப்பு-லைனை (home-line) நாம் தாக்கும் வரை நம்மால் ஊக்கமாக ஜெபிக்க முடிந்தால், தேவனுடைய போதுமான விசுவாசமும் வல்லமையும் இறங்கி வரும். அவர் அன்று எவ்வளவு பெரிதாக இருந்தாரோ, அதே அளவு இன்று இரவும் இங்கே இருக்கிறார், நாம் அதை விசுவாசித்தால் அந்தப் பையனை விடுவிப்பார், ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அதனால்தான் தேவன் அவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்களோடு சேர்ந்து என் ஜெபத்தை ஏறெடுக்க நான் இங்கே இருக்கிறேன். 123 நீங்கள் ஒரு பதிலைப் திரும்பப் பெறும் வரை, வாஷிங்டன் பெற்றிருந்தது போல, யோவான் மாற்கு பெற்றிருந்தது போல, தானியேல் பெற்றிருந்தது போல, மோசே பெற்றிருந்தது போல, உங்களுக்கு ஓர் 'அப்ஸ்லூட்' கிடைக்கும் வரை, நீங்கள் நங்கூரமிட முடியும் என்று உங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒன்று கிடைக்கும் வரை, நீங்கள் ஊக்கமாக ஜெபிக்க முடிந்தால், அப்போது, "இந்த 'அப்ஸ்லூட்'டின் மேல் என் சபையைக் கட்டுவேன்," தேசத்தில் உள்ள எந்த நீதிமன்றங்களாலும் அதை எதிர்க்க முடியாது. அது சரி. அதன் மேல்! 124 பவுல் போன்ற ஒரு சிறிய மூக்கு வளைந்த யூதனை, கோபமடைந்தவனாகவும், கிறிஸ்தவர்கள் அனைவரையும் மரண தண்டனையின் கீழ் கொல்ல கீழே போய்க் கொண்டிருந்தவனையும் பிடித்து, அவனை மாற்றி ஒரு அன்பான கிறிஸ்தவனாக மாற்ற முடிந்த அதே தேவன் இன்று இரவும் ஜீவிக்கிறார். அவர் எப்போது விரும்பினாலும் சட்டத்தை கிருபையாக மாற்ற முடியும். அல்லேலூயா! என்னை ஒரு ஹோலி-ரோலர் (holy-roller) என்று எப்படியும் அழைக்கப் போகிறீர்கள், அதனால் நான் இப்போதே அதை ஆரம்பித்து விடலாம். நான் அந்தத் தேவனை விசுவாசிக்கிறேன். ஆமென். ஆம், ஐயா. 125 பின்னர் மாற்கு 11:22, நீங்கள் ஊக்கமாக ஜெபித்தபோது. அவர், "மெய்யாகவே, மெய்யா கவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: 'நீ பெயர்ந்து போ' என்று சொல்லி, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல், தான் சொன்னவைகள் நடக்கும் என்று விசுவாசித்தால், அவன் சொன்னபடியே அவனுக்கு நடக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். அது பிடித்துக்கொள்வதற்கு ஓர் 'அப்ஸ்லூட்' இல்லையா! நிச்சயமாக, அதுதான். அது சரி, ஓர் 'அப்ஸ்லூட்'. 126 இப்போது, தேசத்திற்கு 'அப்ஸ்லூட்' இருக்கிறது. உங்கள் இல்லற வாழ்க்கைக்கு 'அப்ஸ்லூட்' இருக்கிறது. எல்லா இடங்களிலும், அது எதையாவது சாதிக்கப் போகிறது என்றால், அதற்கு ஓர் 'அப்ஸ்லூட்' இருக்க வேண்டும். 127 இந்த வழக்கறிஞரை நாங்கள் பாராட்டுகிறோம். கலிபோர்னியாவிலிருந்து வந்த இந்தச் சிறந்த சாப்ளின் (chaplain), மற்றும் என்ன ஒரு அற்புதமான செய்தி! மேலும் அந்த ஏழைப் பெண்ணுக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் உதவவும், அவர்களை விடுவிக்கவும் பணத்தையும் எல்லாவற்றையும் கொண்டு செல்ல முயன்ற எங்கள் சகோதரர், என மற்ற எல்லா மனிதர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம். அது எல்லாம் நல்லது. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம், நான் அதற்கு ஆதரவாக இருக்கிறேன். 128 ஆனால் அதற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம் இருக்கிறது நண்பர்களே, இன்று இரவு இந்தக் கூட்டத்தை நாம் முடிக்கும்போது: அதே யேகோவா தேவனிடமிருந்து விடுதலையை அனுப்பக்கூடிய ஒரு ஜெபக் கூட்டத்தை, ஓர் 'அப்ஸ்லூட்'டுடன் தேவனுக்கு முன்பாக நாம் இணைக்க வேண்டும். அவர் அன்று இருந்ததைப் போலவே இன்று இரவும் தேவனாக இருக்கிறார். அல்லேலூயா! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 129 அப்படியானால் நாம் எழுந்து நிற்போம், இன்று இரவு ஓர் 'அப்ஸ்லூட்' நிகழும் வரை இங்கே ஒரு ஜெபக் கூட்டத்தை உருவாக்குவோம். தேவனுக்கு முன்பாக நம் கைகளை உயர்த்துவோம். நீங்கள் முகப்பு-லைனைத் தாக்கும் வரை, ஓர் 'அப்ஸ்லூட்' உங்கள் இருதயத்தில் இறங்கும் வரை ஜெபம் பண்ணுங்கள். 130 கர்த்தராகிய தேவனே, உமது பரிசுத்த ஆவியை கீழே அனுப்பும், அனுப்பி அங்கே இருக்கும் அந்தக் குழந்தைகளை விடுவித் தருளும் ஆண்டவரே. அவர்கள் மரண இருளின் பள்ளத்தாக்குகளில் இருக்கிறார்கள். ஏதோ ஒன்று நடக்கப் போகிறது ஆண்டவரே, இந்த ஜெபக் கூட்டங்கள் அக்கினியைப் பற்ற வைக்கும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நான் உம்மை விசுவாசிக்கிறேன் ஆண்டவரே. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், நீர் அந்தக் குழந்தைகளை விடுவிப்பீர் என்று நான் விசுவாசிக்கிறேன். அதை அருளுவீராக, சர்வவல்லமையுள்ள தேவனே. உமது சபையாகிய நாங்கள், இயேசு கிறிஸ்துவின் மூலமாக இதைக் கேட்கிறோம். ஆமென். ~ 2 ~